Orang ramai mematuhi jarak selamat satu meter ketika membeli barangan keperluan harian berikutan Perintah Kawalan Pergerakan bagi mengawal wabak Covid-19 di Pasaraya Harian Bhuiyen, Bandar Tun Razak, Cheras pada 24 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

பொருட்களின் விலை ஏற்றம்; ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- ஆட்சிக்குழு உறுப்பினர்

ஷா ஆலம், ஏப்ரல் 11:

கோவிட்-19 வைரஸ் நோய் பரவி வருவதால், பொருட்களின் விலை ஏற்றத்தை எதிர் கொள்ள மாநில அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பது மற்றும்  கட்டுப்பாட்டில் கொண்டு வரும் என பயனீட்டாளர் நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சான் உறுதி அளித்தார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் தாம் பார்வையிட்ட வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் ஒரு சில காய்கறி வியாபாரிகள் விலைகளை உயர்த்தி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

” எல்லா சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினர்கள் பொருட்கள் விலை ஏற்றத்தை கண்காணிக்க வேண்டும். விலைகள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நேரிடையாக விவசாயிகளை சந்தித்து காய்கறிகளை வாங்கி கோவிட்-19 காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.


Pengarang :