甘纳巴迪劳。
SELANGOR

1,750 கோத்தா கெமுனிங் மக்களுக்கு உதவிப் பொருட்கள் !

ஷா ஆலம், ஏப்.15-

நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கோத்தா கெமுனிங் தொகுதியைச் சேர்ந்த 1,750 பேருக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்களை அதன் சட்டமன்ற உறுப்பினர் வி. கண்பதி ராவ் பகிர்ந்தளித்துள்ளார்.

“இதுவரை மொத்தம் 2,500 பேர் இந்த உதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களிடம் சம்பந்தப்பட்ட உதவியை கொண்டுச் சேர்ப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகிறோம்” என்றார் அவர்
பிகேபி காலம் ஏப்ரல் 28ஆம் வரை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உதவிப் பொருட்களுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. எனவே, அவ்வப்போது, இந்த உதவிப் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவர் சொன்னார்.

மாதம் ரிம.1,500க்கும் குறைவாக வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு வழங்குவதற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கோத்தா கெமுனிங் சட்டமன்ற தொகுதி சமூக சேவை மையத்தில் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் அவர்.
உதவி தேவைப்படுவோர் தங்கள் குடும்பத் தலைவரின் பெயர், அடையாள அட்டை எண், தொலைப்பேசி எண், முழு முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களுடன் குடும்ப மொத்த வருமானம் ஆகியவற்றை 016- 545 7903 என்ற எண்ணுடன் வாட்ஸ் அப் அல்லது குறுந்தகவல் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Pengarang :