SELANGOR

தண்ணீர் விநியோகத் தடைக்கு காரணமான தரப்பு மீது கடும் நடவடிக்கை!

ஷா ஆலம், ஏப்.17-

சுங்கை சிலாங்கூர் ஆற்றில் மீன் குளத்து கழிவு நீர் கலப்பதற்கு காரணமாகவும் அதனால் அங்குள்ள 4 சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதற்கு காரணமாகவும் இருந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலாங்கூர் தண்ணீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) தெரிவித்தது.

சிலாங்கூர் மாநில நீர் தூய்மைக்கேடு மையம் சிவப்பு குறியீட்டை அறிவித்தவுடன். ஆயர் சிலாங்கூர் நிறுவனத்துடன் இணைந்து லுவாஸ் மேற்கொண்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட தரப்பின் நடவடிக்கை கண்டறியப்பட்டதாக மாநில அரசின் துணை நிறுவனமான லுவாஸ் கூறியது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட போதிலும் அங்கு தூய்மைக்கேடு தொடந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்பின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு அங்கு கழிவுப் பொருட்கள் சுத்திகரிக்கப்படுவதோடு சுங்கை சிலாங்கூர் ஆற்றில் துற்நாற்றமிக்க நீரைக் கலக்காதிருக்கும் வகையில் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லுவாஸ் ஓர் அறிக்கையில் கூறியது.


Pengarang :