Sekatan jalan dilakukan anggota polis di Seksyen 24, Shah Alam pada 16 April 2020 ekoran pelaksanaan Perintah Kawalan Pergerakan. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALSELANGOR

ரமலான் மாதத்தில் பொது மக்கள் வீட்டில் இருக்க வேண்டும்- நூர் ஹிஸாம்

ஷா ஆலம், ஏப்ரல் 22:

ரமலான் மாதத்தில் முஸ்லிம் சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் வீட்டில் சமய வழிபாடுகள் மற்றும் நடவடிக்கைகள் நடத்தும்படி சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். இதன் மூலம் குடும்பத்தினரின் சுகாதாரத்தை பேண முடியும் குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் கோவிட்-19 நோய் பரவலை தடுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ரமலான் மாதத்தில் முஸ்லிம்களின் கலாச்சாரம் மற்றும் சமய வழிபாடுகள் உலக அளவில் பாதிக்கப்பட்ட சூழ்நிலையை தமக்கு புரிந்து கொள்ள முடியும் என்றும் நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) நடைமுறைகளை பின்பற்றி நோய் பரவலை தடுக்கும் முயற்சியாக இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.


Pengarang :