Petugas perubatan melakukan ujian saringan Covid-19 percuma melalui kaedah pandul lalu di Dewan Raja Muda Musa
NATIONAL

கோவிட்-19 தொற்றை அடையாளம் காண 2 வியூகங்களை மலேசிய சுகாதா அமைச்சு அமல்படுத்துகிறது!

ஷா ஆலம், ஏப்.22-

உள்நாட்டு மக்கள் மத்தியில் கோவிட்-19 தொற்று இருப்பதை அடையாளம் காண மலேசிய சுகாதார அமைச்சு (கேகேஎம்)இரு வியூகங்களை அமல்படுத்துகிறது.
முதலாவது வியூகம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க மருத்துவமனையில் உள்ள கடுமையான சுவாசக் கோளாறு (சாரி) மற்றும் சளி காய்ச்சல் கணவடர்களின் மாதிரிகளை சேகரித்தல் என்று கேகேஎம் அதன் டூவிட்டரில் தெரிவித்தது.

நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட 2,699 சாரி மாதிரிகளில் 56 பேருக்கு அல்லது 2.1 விழுக்காட்டினருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று அது கூறியது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு சுகாதார கிளினிக்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 1,280 மாதிரிகளில் 8 போவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன என்று கேகேம் இன்று தெரிவித்தது.

தொற்று அதிகம் பரவக் கூடிய இடங்கள் உதாரணமாக தாஹ்ஃபிஸ் பள்ளிகள், அந்நியத் தொழிலாளர்கள் மற்றும் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட ஆணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவது அமைச்சின் இரண்டாவது வியூகமாகும் என்று அது விவரித்தது.
“வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட சோதனை வழியாக கடுமையான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன” என்று கேகேஎம் கூறியது.


Pengarang :