SELANGOR

தனிமைப்படுத்தும் மையத்திற்கு பேருந்துகள் தொடர்ந்து செயல்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 23:

நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) மூன்றாம் கட்டத்தில் நோக்கி வரும் சூழ்நிலையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் மலேசிய மக்களை தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லும் பணியை சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து 20 ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகளை பணியில் அமர்த்தி உள்ளதாக பொது போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். தேசிய பேரழிவு நிர்வாக அமைப்பின் கோரிக்கை அடிப்படையில் காலை 7 தொடங்கி இரவு 10 மணி வரை இச்சேவை வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” வெளிநாட்டில் இருந்து தாயகத்திற்கு திரும்பும் மலேசியர்களை விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளை ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் செய்து வருகிறது. இப்பணியில் அயராது உழைக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கு மாநில அரசாங்கம் நன்றியினை தெரிவிக்கிறது. பேருந்து ஓட்டுநர்களின் பணி மிகவும் ஆபத்தானது. ஆனாலும், தன்னம்பிக்கையோடு மக்களின் நல்வாழ்வுக்கு தங்களது உயிரை துச்சமென நினைத்து செயலாற்றும் இவர்கள் சேவை இன்றியமையாதது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.


Pengarang :