NATIONALSELANGOR

இவ்வாண்டு ரமலான் மாதம் வழக்கம்போல் இல்லை ஆக்கப்பூர்வமான அட்டவணை அமைத்து பயனடைவீர்!

ஷா ஆலம், ஏப்.24-

ரமலான் மாதம் முழுவதும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உட்படுத்தும் அட்டவனை அமைத்து கொள்ள வேண்டும் என்று மகளிர் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஸ்முட் கூறினார். இவ்வாண்டு நோன்பு கொண்டாடன் வழக்கம் போல் இருக்காது என்பதால் பயனளிக்கும் வகையில் அதனை அமைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும் என்றார் அவர்.

இந்த ரமலான் மாதத்தை ஆண்டவனின் சோதனை என்று ஆக்கப்பூர்வமாக கருதுங்கள். இச்சோதனை ஆண்டவனை நாம் நெருங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாகும் என்று அவர் சொன்னார்,
“இந்த ரமலான் மாதம் நமது குடும்ப தலைவர் இமாம் ஆகப் பயிற்சி எடுத்து பிள்ளைகளை வழி நடத்தவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

“இவ்வாண்டு கடந்த காலங்களைப் போல பள்ளிவாசலில் ஒன்று கூடவும் நோன்பு துறக்கவும் இயலாது. மாறாக, வீட்டில் உள்ள அன்பானவர்களோடு அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிட்டியுள்ளது” என்று அவர் சுட்டிக் காட்டினார்.


Pengarang :