KUALA LUMPUR, 21 April — Salah seorang penduduk di sekitar kawasan Pasar Borong Kuala Lumpur, Selayang menerima barangan yang dibeli menggunakan khidmat penghantar barangan melalui celahan pagar kawat duri ketika tinjauan fotoBernama di kawasan Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) Pusat Bandar Utara hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

பலத்த கட்டுபாடுகளுடன் செலாயாங் மொத்த சந்தை திறக்கப்பட்டது !!!

கோலா லம்பூர், ஏப்ரல் 25:

கிருமிநாசினி மற்றும் துப்புரவுப் பணிகளை நான்கு நாட்களாக மேற்கொண்ட பின்னர், செலயாங்கில் உள்ள கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியதாக கூட்டரசுப்பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ  அன்வார் மூசா தெரிவித்தார். ஆயினும், மொத்த விற்பனை சந்தையின் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

பொது மக்கள் மற்றும் சந்தையில் வணிக நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் மத்தியில் கோவிட்-19 பாதிப்பைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தப்படுகின்றன. மேலும், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் முகமூடிகளை மற்றும் கையுறைகள் போன்ற பொருத்தமான சுய பாதுகாப்பு உபகரணங்களையும் (பிபிஇ) பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அட்டவணைப்படி லாரிகள் நுழைய அனுமதிக்கப்படும் என்று அன்வார் மூூமூசா செய்தியாளர்களிடம் கோலா லம்பூரில்  அவர் கூறினார்.


Pengarang :