Dato’ Seri Amirudin Shari melihat peta kawasan yang terlibat dalam Perintah Kawalan Diperketatkan (PKPD) Selayang di Dewan Orang Ramai Kampung Selayang Indah, Batu Caves pada 25 April 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONALSELANGOR

செலாயாங் பாரு குடியிருப்பாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் – மந்திரி பெசார்

செலாயாங், ஏப்ரல் 25:

தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கெஎன்) முடிவின் எதிரொலியாக செலாயாங் பாரு பகுதி கடுமையாக்கப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிடி) பிறப்பித்துள்ள நிலையில் ஏறக்குறைய 3,000 பொது மக்கள் கோவிட்-19 சமூக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். இதில் அந்நியர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா கூடிய விரைவில் இந்த நடவடிக்கையில் இறங்கும் உறுதி அளித்தார். அது மட்டுமல்லாமல், பிகேபிடி நடவடிக்கையை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.

” எம்கெஎன் உத்தரவின் கீழ் பிகேபிடி நடவடிக்கை கோவிட்-19 நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆகும். இங்கு கட்டுமான வீடமைப்பு பகுதிகளில் புதிதாக கோவிட்-19 நோய் கிளஸ்தர் தோன்றியுள்ளது. ஆகவே, செலாயாங் பாரு குடியிருப்பாளர்கள் அனைவரும் கோவிட்-19 நோய் பரவலை தடுக்க முயற்சிகளை அரசாங்கம் எடுத்து வரும் சூழ்நிலையில் ஏதேனும் இடையூறுகள் நேர்ந்தால் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எல்லா நடவடிக்கைகளும் நோய் பரவலை நிறுத்துவதற்கே என புரிந்து கொள்ள வேண்டும்,” என்று செலாயாங் பாரு பொது மண்டபத்தில் பிகேபிடி நடவடிக்கை அறையை பார்வையிடும் போது சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.


Pengarang :