SELANGOR

யாரிடமும் பணப் பறிமாற்றம் செய்யக் கோரவில்லை- ஆட்சிக் குழு உறுப்பினர்

ஷா ஆலம், ஏப்.29-

வாட்ஸ்அப் செயலி மூலம் தனிநபர் ஒருவரை தனது சேமிப்புக் கணக்கில் ஒரு தொகையை சேர்க்கும்படி கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டை அடிப்படை வசதி மற்றும் பொது வசதி, விவசாயம் சாந்த தொழிற்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் மறுத்தார்.
தனது விவரங்களுடம் புகைப்படமும் தாங்கிய வாட்ஸ்அப் செயலி மூலம் மற்றொரு அதிகாரிக்கு இதே போன்றதொரு செய்தி கடைத்தது குறித்து தமக்கு தெரிவிக்கப்பட்டவும் ஒரு சூழ்ச்சி கும்பலின் சதி வேலைக்கு தான் பலியாகி இருப்பதை உணர்ந்ததாக அவர் சொன்னார்.

இது தவிர்த்து எனது நண்பர்கள் சிலரும் வாட்ஸ்அப் இந்த செய்தியை பெற்றதாக என்னிடம் தெரிவித்தனர் என்று அவர் விளக்கமளித்தார். இது போன்றதொரு நடவடிக்கையை நான் மேற்கொள்ளவில்லை என்று இஷாம் தனது முகநூலில் தெரிவித்தார். வீணாக பழி சுமத்தப்பட்டுள்ள தனது பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க இவ்விவகாரரம் குறித்து தாம் காவல் துறையிடம் புகார் செய்யவிருப்பதாக பாண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினருமான இஷாம் சொன்னார்.


Pengarang :