Hasnul Baharuddin (tengah) menyampaikan bungkusan makanan asas kepada salah seorang penduduk yang berada di sekitar DUN Morib bagi meringankan beban susulan PKP. Foto ihsan Facebook Hasnul Baharuddin
SELANGOR

பிகேபி: மோரிப் சட்ட மன்றத்தில் 1,000 உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது

ஷா ஆலம், ஏப்ரல் 29:

நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மோரிப் சட்ட மன்ற தொகுதிக்குள் உட்பட்ட 10 கிராமங்களில் வசிக்கும் சுமார் 1000 குடும்பங்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டதாக மோரிப் சட்ட மன்ற உறுப்பினர் ஹாஸ்னூல் பஹாரூடின் தெரிவித்தார்.

” கிராமத் தலைவர்கள், வீடமைப்பு பகுதிகளின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசலின் பிரதிநிதிகள் இந்த பொருட்களை கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர். பிகேபி காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க இது துணை புரியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.

தமது சட்ட மன்ற அலுவலகம், பிகேபி நடவடிக்கை நான்காவது கட்டத்தில் காலடி எடுத்து வைக்கும் நேரத்தில் தொடர்ந்து உதவிகளை மேற்கொண்டு வரும் என உறுதிக் கூறினார்.


Pengarang :