八打灵县卫生局官员为灵市2个巴刹的小贩进行新冠病毒检测。
SELANGOR

பெட்டாலிங் ஜெயா பகுதியில் உள்ள இரண்டு சந்தைகளிலும் கோவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 30:

ஓஸ்மான் சாலைச் சந்தை மற்றும் தாமான் மெகா பொதுச் சந்தை ஆகிய இரண்டு சந்தைகளிலும் சம்பந்தப்பட்ட 303 நபர்களை கோவிட்-19 நோய் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாக பெட்டாலிங் மாவட்ட பேரழிவு நடவடிக்கை குழு தலைவர் ஜோஹாரி அன்வார் கூறினார். இதில் 118 நபர்கள் ஓஸ்மான் சாலைச் சந்தையை சேர்ந்த வியாபாரிகள், 17 துப்புரவு பணியாளர்கள் மற்றும் அமலாக்க பணியாளர்கள் ஆக மொத்தம் 151 நபர்கள் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கைகளை பெட்டாலிங் மாவட்ட சுகாதார இலாகாவின் 14 மருத்துவ பணியாளர்கள் மேற்கொண்டனர்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார். இதனிடையே, தாமான் மெகா பொதுச் சந்தையில் 135 வியாபாரிகள் மற்றும் 17 அமலாக்க பணியாளர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :