KUALA LUMPUR, 16 April — Sebahagian individu warga tempatan yang dikuarantin sementara melambaikan tangan tanda sokongan kepada barisan hadapan yang bertugas untuk COVID-19 dan Kerajaan Malaysia ketika tinjauan di Impiana Hotel pada program ‘Thumb to Malaysia ‘ malam ini. Impiana hotel antara lokasi yang digazetkan kerajaan bagi menempatkan individu yang perlu menjalani saringan COVID- 19. Seramai 500 orang yang baru pulang dari luar negara ditempatkan sementara bagi saringan COVID-19. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

கோவிட்-19: ஆறு நாடுகளில் இருந்து திரும்பிய 25 நபர்களுக்கு நோய் தொற்றியது !!!

ஷா ஆலம், ஏப்ரல் 30:

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 25 மலேசியர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்றியுள்ளது என்று சுகாதார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் ஆறு நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் ஆகும்.

” 25 நோயாளிகளில், 12 பேர்கள் ஐக்கிய அரபு சிற்றரசு, எகிப்து (6), சிங்கப்பூர் (3), நார்வே (2), இந்தோனேஷியா மற்றும் இங்கிலாந்து முறையே ஒரு நோயாளிகள் ஆகும்,” என்று சுகாதார அமைச்சு அதன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளது.

இன்று மலேசியாவில் மொத்தம் 57 கோவிட்-19 புதிய நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 25 இறக்குமதி சம்பவங்கள் ஆகும். நேற்று 94 சம்பவங்கள் ஏற்பட்ட வேளையில் 72 இறக்குமதி சம்பவங்களாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :