Notis jarak sosial diletakkan di tempat duduk Sistem Transit Aliran Ringan (LRT) Ampang bagi mengawal penularan Covid-19 pada 5 April 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படும்

ஷா ஆலாம், மே 3:

தொடர்பு மற்றும் நெரிசலைத் தவிர்க்க பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும். பொது போக்குவரத்து வாகனங்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்க அனைவரும்  உறுதி செய்யும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது  என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

“எடுத்துக்காட்டாக, 40 பயணிகள் திறன் கொண்ட பேருந்தில் 20 பயணிகள் மட்டுமே செல்ல முடியும். இதேபோல், மாஸ் டிரான்ஸிட் (எம்ஆர்டி) வழக்கத்தை விட பாதி எண்ணிக்கையிலான பயணிகளை எடுக்க முடியும்,” என்று புத்ராஜெயாவில் இன்று தினசரி செய்தியாளர் கூட்டத்தில் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

காவல்துறை மற்றும் இராணுவம் போன்ற பாதுகாப்புப் பணியாளர்கள் காத்திருக்கும் பகுதிகளிலும், பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றுவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

“எம்ஆர்டியில் மலேசிய தன்னார்வத் துறையின் உறுப்பினர்கள் இருக்கலாம், இது நாங்கள் தீர்மானிக்கும் விவரங்களில் ஒன்றாகும்” என்று அவர் கூறினார். தனியார் வாகனங்களைப் பொறுத்தவரை, இஸ்மாயில் சப்ரி கூறுகையில், அரசாங்கம் இதை நான்கு பேர் வரை அனுமதித்தது, ஆனால் அது ஒரே வீட்டிலிருந்தே இருக்க வேண்டும்.


Pengarang :