Pasukan polis dibantu tentera melakukan sekatan jalan raya di kilometer 14 Jalan Kuala Lumpur-Ipoh, Selayang pada hari keenam pelaksanaan Perintah Kawalan Pergerakan berikutan penularan Covid-19 pada 23 MAC 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

பிகேபியை பின்பற்றாத நபர்களுக்கு தண்டனையை நீதிமன்றமே முடிவு செய்யும் – இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, மே 6:

நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) மீறியவர்களின் தண்டனையை மாஜிஸ்திரேட் அல்லது நீதிபதியே முடிவு செய்யும் அதிகாரம் உண்டு என மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்திற்கு முழு சுதந்திரம் உள்ளது என்றும் மக்களாட்சி நடைமுறையின்படி அரசாங்கம் தலையிடாது என உறுதி அளித்தார். பிகேபி பொறுத்தவரையில் தவறு புரிந்தவர்கள் மீது தண்டனை அல்லது அபராதம் போன்றவை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் மீண்டும்  நினைவு படுத்தினார்.

” 342-சட்ட விதியின் கீழ் அபராதத் தொகையாக ரிம 1000-க்கு மேல் இருக்கக்கூடாது. இதன் அடிப்படையில், தண்டனையை முடிவு செய்வது மாஜிஸ்திரேட் அல்லது நீதிபதியின் கையில் உள்ளது. ஒவ்வொரு வழக்குகளும் வெவ்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் அவர்களுக்கு மட்டுமே உள்ளது,” என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு இஸ்மாயில் சப்ரி பேசினார்.


Pengarang :