Presiden AS, Tan Sri Muhyiddin yang menerima panggilan telefon daripada Trump berkata selain menerima ucapan tahniah bagi kerajaan yang baharu,
NATIONAL

டிரம்ப் கோவிட்-19 நோய் தொடர்பில் முஹீடின் உடன் பேசினார் !!!

கோலா லம்பூர், மே 8:

அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் உடன் உலகம் முழுவதும் கோவிட்-19 நோய் பரவல் மற்றும் அதை எதிர் கொள்ளும் வழிகள் ஆகியவை தொடர்பில் நேற்றிரவு பேசினார். தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசிய டிரம்ப் முதலில் முஹீடினுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அதன் பிறகு, மலேசிய அமெரிக்கா உறவில் மேலும் முன்னேற்றம் மற்றும் உறுதிமொழி அளித்தார்.

” 30 நிமிடங்கள் நீடித்த தொலைபேசி உரையாடலில் அதிபர் டிரம்ப் கோவிட்-19 நோய் தொடர்பில் இரண்டு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகள் பற்றி என்னோடு கலந்தாய்வு செய்தார். இந்த உரையாடலில் நாங்கள் இருவரும் கோவிட்-19 நோய் தாக்கத்தை எதிர் கொள்ள அனைத்துலக சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் உறுதி அளித்தோம். இது உலக மக்களின் நல்வாழ்வு மற்றும் குளோபல் பொருளாதாரத்திற்கும் தூண்டுகோலாக இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்தோம்,” என முஹீடின் யாசீன் தனது முகநூலில் பதிவு செய்தார்.

இதுமட்டுமின்றி, முஹீடின் மற்றும் டிரம்ப் கோவிட்-19 நோயை தடுக்கும் மருந்து மற்றும் வாக்சின் ஆகியவற்றை மேம்படுத்த ஒருங்கிணைந்து செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். உலக சுகாதார நெருக்கடியான காலகட்டத்தில் மருத்துவ தளவாடப் பொருட்களின் விநியோகம் சீராக இருக்க இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க உறுதி அளித்துள்ளதாகவும் முஹீடின் யாசீன் தெரிவித்தார்.


Pengarang :