Seorang wanita memakai topeng muka melalui di hadapan pusat membeli belah di Bukit Bintang, Kuala Lumpur selepas kerajaan membenarkan beberapa sektor ekonomi beroperasi berikutan pelaksanaan Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB) semasa tinjauan SelangorKini pada 6 Mei 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

நாட்டின் 94.4 சதவீதப் பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது

புத்ராஜெயா, மே 10:

கடந்த இரண்டு வாரங்களில் எந்த ஒரு கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் பதிவு செய்யாத 1,112 பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது. இதில் நேற்று  ஐந்து மாவட்டங்கள் கோவிட்-19 இல்லா பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
அந்த ஐந்து மாவட்டங்கள், திரங்கானுவில் கோலா நெருஸ் மற்றும் செட்டியு, சரவாக்கில்  முஞ்சான், சபாவில் பீஃபோர்ட் மற்றும் சிலாங்கூரில் சபாக் பெர்னாம் ஆகும்.

இன்று மதியம் வரை புதுப்பிக்கப்பட்ட சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில் இந்த எண்கள் உள்ளன.
கோவிட்-19 பாதிப்புகள் இல்லாத பகுதிகள் பச்சை மண்டலங்கள் என்றும், 40 பாதிப்புகள் உள்ள பகுதிகள் மஞ்சள் மண்டலங்கள் என்றும் பெயரிடப்பட்டுள்ளன. சிவப்பு மண்டலம் என்பது 40க்கும் மேற்பட்ட கோவிட்-19 பாதிப்புகளைக் கொண்ட பகுதியாகும்.


Pengarang :