Dato’ Seri Amirudin Shari berucap pada majlis Penyerahan Sumbangan Al-Quran Wakaf Yayasan Restu kepada petugas barisan hadapan dan Pusat Kuarantin Covid-19 di Kediaman Rasmi Dato’ Menteri Besar, Seksyen 7 Shah Alam pada 9 Mei 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

பிகேபி காலகட்டத்தில் சுங்கை துவா சட்ட மன்றத்தில் உதவிகள் ரிம 220,580-ஐ எட்டியது

ஷா ஆலம், மே 11:

நடமாடும் கட்டுப்பாடு ஆணையின்  (பிகேபி) போது சுங்கை துவா சட்ட மன்ற தொகுதியில் வசிப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட மொத்த நன்கொடைகள் ரிம 220,580-ஐ எட்டின என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ  அமிருடின் ஷாரி  கூறினார். உணவு, முகமூடி மற்றும் முன் வரிசை பணியாளர்களுக்கு கிருமி நாசினி  உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ரமலான் மாதத்தில் சட்ட மன்ற சேவை மையம் தினசரி தேவைப்படுபவர்களுக்கு நோன்பு துறக்க உணவுகள் வழங்குவதாகவும் அவர் கூறினார்.

” முந்தைய ஆண்டுகளில், எனது சட்ட மன்ற தொகுதியில் உள்ள சமூகங்களுடன் சேர்ந்து நோன்பு துறப்பேன். ஆனால் கோவிட் -19 தொற்று நோய் அச்சுறுத்தல் காரணமாக இந்த சூழலில் அவர்களுக்கு உணவு மட்டுமே வழங்க முடிகிறது. அவர்களின் வாழ்க்கை சூழ்நிலையில் அவ்வப்போது  கேட்டு தெரிந்து கொள்ள முடிகிறது,”  என்று அவர் இன்று தமது முுகநூல் பதிவில் தெரிவித்தார். இப்பகுதியில் உள்ள மக்களின் பிரதிநிதியாக,  எப்போதும் தனது இதயத்திற்கு நெருக்கமாக இருப்பதாகவும், மக்கள் அனைவரும் மிகுந்த பொறுமையுடனும் ரமலான் மாதத்தை கடந்து செல்ல முடியும் என்று நம்புவதாகவும் அமிருதீன் கூறினார்.

மே 8 ஆம் தேதி, நிதிச் சுமையைத் தணிப்பதற்கும், மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனையுடன் நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபிடி) இன் கீழ் மளிகைக் கடைக்கு செல்லும் மக்களின் நடமாடுவதைக் குறைப்பதற்கும் செலாயாங்கின் கம்போங் ஒராங் அஸ்லி உலு பத்து  மக்களுக்கு அவர் அடிப்படைத் தேவைகளை  வழங்கியதாக முகநூலில் பதிவு செய்தார்.


Pengarang :