KUALA LUMPUR, 6 Mei — Anggota Angkatan Tentera Malaysia (ATM) mengawal di sekitar kawasan Bandar Baru Selayang ketika tinjauan fotoBernama hari ini. Bandar Baru Selayang merupakan antara kawasan yang dikuatkuasakan Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) bermula 25 April lepas. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

செலாயாங் பாரு பிகேபிடி நடவடிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது !!!

ஷா ஆலம், மே 12:

கோம்பாக் மற்றும் செலயாங் பாரு பகுதிக்கான நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையை  (பிகேபிடி) கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.கோவிட்-19 பரிசோதனையை முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

” கோம்பாக் மற்றும் செலாயாங் பாரு பகுதிகளுக்கு, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் சுகாதார அமைச்சின் பரிசோதனை முடிவுற்று விடும். அதன் பிறகு,  அரசாங்கம் பிகேபிடியை முடிவுக்கு கொண்டு வருவதை உறுதி செய்வோம்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஏப்ரல் 25 ம் தேதி, சுகாதார அமைச்சரின் ஆலோசனையின் பேரில், மலேசியாவின் ஏழாவது பிகேபிடியை சிலாங்கூரின் கோம்பாக்கில் உள்ள செலயாங் பாரு பகுதியில் செயல்படுத்த முடிவு செய்தது. கோலாலம்பூர் மொத்த சந்தை மற்றும் வடக்கு சிட்டி சென்டர் பகுதியில் ஆறாவது பிகேபிடி இன்று முடிவடைந்தது என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.


Pengarang :