SELANGOR

கோவிட்-19: உலு சிலாங்கூரில் ஆலயங்களுடன் இணைந்து அத்தியாவசிய பொருட்களை ஆட்சிக்குழு உறுப்பினர் வழங்கினார்

ஷா ஆலம், மே 12:

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் முயற்சியில் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள எட்டு இந்து ஆலயங்களுடன் இணைந்து வறுமை கோட்டின் கீழ் உள்ள பி40 வர்க்கத்திற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் லியாவ், உலு சிலாங்கூர் மாவட்ட மன்ற (எம்டிஎச்எஸ்) உறுப்பினர்கள், சிலாங்கூர் இந்திய சமுதாய தலைவர்கள், செம்பிறை சங்கம் மற்றும் ஸ்மார்ட் சிலாங்கூர் குழுவினர் ஆகியோரின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவிட்-19 தொற்று நோய் பாதிப்பினால் நாட்டு மக்கள் பெரும் பொருளாதார பாதிப்பை எதிர் கொண்டிருக்கும் நிலையில் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரின் உதவி பெரும் உதவியாக உள்ளது என அனைவரும் பெருமிதம் கொண்டனர். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) அல்லது நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் பொது மக்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறது என கணபதி ராவ் கூறியுள்ளார். ஆகவே, மாநில அரசாங்கத்தின் நன்முயற்சியை ஆலயங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Pengarang :