NATIONAL

கூட்டத் தொடரை கேள்வி எழுப்பினாலும்; நாடாளுமன்றத்தில் பாக்காத்தான் கட்டுடொழுங்கை கடைபிடிக்கும் – அன்வார் இப்ராஹிம்

ஷா ஆலம், மே 16:

பாக்காத்தான் ஹாரப்பான் (பக்காத்தான்) நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் கட்டொழுங்கை கடைப்பிடிப்பதாகவும், திங்களன்று நாடாளுமன்ற விதிமுறைகளை பின்பற்றுவதாகவும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார். மக்கள் நீதிக் கட்சியின் தலைவரும், பாக்காத்தான்  தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அவர் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஆணையை ஏற்று நடக்க இருப்பதாக தெரிவித்தார்.

“திங்கள்கிழமை அமர்வுக்கான காரணத்தை நான் அனைவரிடமும்ந வலியுறுத்தினேன், நாங்கள் மாமன்னரின் ஆணையை மதிக்க வேண்டும், எந்தவொரு பிரச்சினையும் ஏற்படக்கூடாது, இதனால் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் (நடந்துகொண்டிருக்கும்) மரியாதைக்குரியதாகவும் ஒழுங்காகவும் இருக்கும். பின்னர் நீதிமன்றத்திலோ அல்லது ஒரு அரசியல் ரீதியாகவோ நாங்கள் பிறகு எதிர் கொள்வோம். குறிப்பாக யாங் டி-பெர்டுவான் அகோங் முன்னிலையில் எந்த ஒரு பிரச்சனையும் எழக்கூடாது,” என்று  போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இப்ராஹிம்  இன்று ஒரு நேரடி முகநூல் பதிவில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒரு நாள் மட்டுமே கூடுகிறது. இதனால் பாக்காத்தான்  தலைவர்கள் அதை முழுமையாகவோ அல்லது குறைந்தது இரண்டு வாரங்களிலோ செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :