Kuala Lumpur (Malasia), 22 de enero 2013. El Vicecanciller Marco Albuja, acompañado por la Embajadora Lourdes Puma y la Subsecretaria para Asia, África y Oceanía (E) Elena Yánez, se reúne con el Viceministro de Comercio Exterior e Industrias YB. Dato Mukhriz bin Tun Mahathir. Foto: Fernanda LeMarie – Cancillería.
NATIONAL

கெடா பாக்காத்தான் அரசாங்கம் வீழ்வதற்கு காரணம் நஜீப் – முக்ரீஸ்

அலோர் ஸ்தார், மே 17:

பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சி மற்றும் தமது கெடா மந்திரி பெசார் பதவி பறிப்பு, இவை இரண்டுக்கும் பின்னால் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் இருப்பதாக குற்றம் சாட்டினார் டத்தோ ஸ்ரீ  முக்ரிஸ் மகாதீர். தம்மை மந்திரி பெசார் பதவியில் இருந்து அகற்ற முஹீடின் யாசினிடமிருந்து உத்தரவு வந்த போதிலும், இத்திட்டத்திற்குப் பின்னால் நஜிப் இருப்பதாக முக்ரிஸ் கடுமையாக சாடினார்.

“ 1எம்டிபி பண மோசடி, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் மற்றும் உலகில் மலேசியாவை கேவலமாக பேசும் அளவுக்கு  பல பெரும் ஊழல்களிலிருந்து தன்னை விடுவிப்பதே அவரது நோக்கம். குற்றவியல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ரோஸ்மா மன்சோரின் மகன் ரிசா அஜீஸ் வழக்கு என்ன ஆனது என்று பாருங்கள்” என்று இன்று கெடாவின் விஸ்மா டாருல் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் முக்ரிஸ் இவ்வாறு கூறினார்.


Pengarang :