NATIONAL

கோழி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வுக்கு காரணம் அரசாங்கமே- முன்னாள் அமைச்சர்

கோலா லம்பூர், மே 21:

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதால் தான், கோழி மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்து வருவதாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை முன்னாள் அமைச்சர் சலேஹுடின் அயூப் கூறினார்.
குறிப்பிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர்கள் விவகார அமைச்சு அறிவித்துள்ள போதிலும் கோழி, காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நோன்புப் பெருநாள் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர். தாம் அமைச்சராக இருந்தபோது உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர்கள் விவகார அமைச்சுடன் அணுக்கமாக ஒத்துழைத்து இந்த விவகாரத்திற்குத் தீர்வு கண்டதாக அவர் குறிப்பிட்டார். நோன்புப் பெருநாள், காவாய் தினம், பெஸ்தா கமாத்தான் போன்ற காலங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

#தமிழ் மலர்


Pengarang :