NATIONAL

கணவன்-மனைவி, மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் !!!

புத்ராஜெயா, ஜூன் 1:

கணவன் மனைவி, மாநிலம் கடந்து செல்லவதற்கு அனுமதி வழங்கப் பட்டிருந்தாலும், அரச மலேசிய போலீஸ் படை தரப்பிடம் இருந்து, ஒப்புதல் கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். சபா மற்றும் சரவா உட்பட, அவசர நிலை, இறப்பு, வேலை மற்றும் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே, மாநில கடந்து செல்வதற்கு அனுமதி வழங்கப் பட்டிருப்பதை, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதனிடையே, இக்காலக்கட்டத்தில், மாநிலம் கடந்துச் செல்வதற்கு ‘கெராக் மலேசியா’ செயலியை பயன்படுத்த முடியாது. மாறாக, மாநிலம் கடந்துச் செல்வதற்கு, பொதுமக்கள் போலீசாரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெளிவுப்படுத்தினார்.
இந்நிலையில், ஜூன் ஒன்பதாம் தேதிக்கு பின்னர், சாலைத் தடுப்பு நடவடிக்கைகள் தொடரப்படுவது குறித்து இன்னும் முடிவுச் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், பிகேபிபி அமலாக்கத்தன் கால வரையைப் பொறுத்தே அந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
–பெர்னாமா


Pengarang :