KAJANG, 3 Jun — Guru SMK Engku Husain Rohana Asha’ari (kiri) bersama Siti Fatimah Mahmud (kanan) dan Manisa Rahmat (tengah) menyusun meja mengikut garis panduan bagi persediaan pembukaan semula sekolah pasca Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB) di Sekolah Menengah Kebangsaan (SMK) Engku Husain. Langkah-langkah pengurusan garis panduan ini dibuat bagi mengelakkan pelajar dijangkiti COVID-19. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

ஜூன் 24 முதல் படிவம் 5 மற்றும் 6 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு செல்லலாம் !!!

புத்ராஜெயா, ஜூன் 10:

பொதுத்  தேர்வு எழுதும் படிவம் ஐந்து மற்றும் படிவம் ஆறு பயிலும் மாணவர்கள்  ஜூன் 24- ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என்று கல்வி அமைச்சர் முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் தெரிவித்தார். சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கெஎன்) ஆகியவற்றின் ஆலோசனையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

“பொதுத் தேர்வு மாணவர்களான, எஸ்பிஎம், எஸ்விஎம், எஸ்டிபிஎம், எஸ்டிஏஎம் மற்றும் அனைத்துலக தேர்வு ஆகியவற்றுக்கான தொடக்க நாள் ஜூன் 24 புதன்கிழமை என்று கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ” என்று அவர் இன்று சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். முன்னதாக, இன்று தொடங்கும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது, பள்ளிகள் மீண்டும் கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்று பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்திருந்தார்.


Pengarang :