NATIONAL

அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று முதல் செயல்பட முடியும் !!!

புத்ராஜெயா, ஜூன் 15:

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து வழிப்பாட்டுத்தலங்களும் மீண்டும் செயல்படுவதற்கு இன்று, திங்கட்கிழமை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அவை, தேசிய ஒற்றுமை அமைச்சு தாக்கல் செய்திருக்கும் புதிய செயல்பாட்டு தரவிதிமுறையை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

புத்ராஜெயாவில், இன்று,திங்கட்கிழமை, மீட்புநிலை நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவான பிகேபிபி தொடர்பில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இத்தகவல்களைத் தெரிவித்தார்.

இதனிடையே, சிவப்பு மண்டலப் பகுதியைத் தவிர்த்து, கூட்டரசு பிரதேசத்தில் இருக்கும் அனைத்து பள்ளிவாசல்களும் மசூதிகளும் மீண்டும் செயல்படுவதற்கும் இன்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இதர மாநிலங்களில், பள்ளிவாசல்களும் மசூதிகளும் திறக்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட மாநில மத அதிகாரத் தரப்பு முடிவெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பி.கே.பி காலக்கட்டத்தின் போது விதிக்கப்பட்டிருந்த செயல்பாட்டு தரவிதிமுறையை பின்பற்றுவோரின் விகிதம் அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.


Pengarang :