NATIONAL

செலாயாங் மொத்த வியாபாரச் சந்தையில் 200 கடைகளை டிபிகெஎல் மீட்டுக் கொண்டது- அன்வார் மூசா

கோலா லம்பூர், ஜூன் 19:

நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) போது, செலாயாங் மொத்த வியாபாரச் சந்தையில்  கிட்டத்தட்ட 200 வியாபார கடைகளை அந்நிய நாட்டினர் தவறாக பயன்படுத்திய காரணத்தால், இன்று அந்த 200 கடைகளையும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகெஎல்) மீட்டுக் கொண்டது. அங்குள்ள அந்நிய சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதன் விளைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான செய்லகளில் ஈடுபடுவோருக்கும் எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறினார்.

அப்பகுதியில் இன்னும் சில அந்நியர்கள் வியாபாரங்களை செய்து வருகின்றனர். அவர்களை அடையாளம் காணும் பணியின் அமலாக்க அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். இது போன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ நோர் ஹிஷாம் அஹ்மாட் டாஹ்லனிடம் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.


Pengarang :