NATIONAL

புத்ராஜெயாவை வழிநடத்த வாய்ப்புக் கிடைத்தால் கெஅடிலான் நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்யும் !!!

ஷா ஆலம், ஜூன் 19:

மத்திய அரசை வழிநடத்த பக்காத்தான் ஹாராப்பான் திரும்பினால் நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதில் மக்கள் நீதிக் கட்சி (கெஅடிலான்) கவனம் செலுத்தும் என அதன் மத்திய செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழிலாளர்களின் தலைவிதிக்காக போராடவும் கெஅடிலான் முன்னெடுத்துச் செல்ல உறுதி அளித்துள்ளது.

” புதிய மத்திய அரசு இந்த விடயங்களை  செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.  அரசாங்க நிர்வாகத்தின் சீர்திருத்தம் மற்றும் சீர்திருத்த அம்சங்களை வலியுறுத்திய கெஅடிலான் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அறிக்கையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பெல்டா குடியேறியவர்களின் அவலத்திற்காக போராடுவதற்கும் தங்களது உணர்வுப்பூர்வான ஆதரவு தெரிவித்தனர்.

தேசிய மேம்பாட்டு திட்டங்களில் யாரும் விடுபடாமல் இருக்கவும் மலாய்க்காரர்கள், சபா மற்றும் சரவாக் பழங்குடி மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர். எதிர்காலத்தில் மக்கள் ஆணையை மீட்டெடுக்க அனைத்து கட்சிகளையும் அணிதிரட்டுவதன் மூலம் பக்காத்தான் ஹாரப்பானை வலுப்படுத்தவும் கெஅடிலான் உறுதிபூண்டுள்ளது. பிரதமர் வேட்பாளராக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், புதிய அரசு நிர்வாகம் பல முறை தலைமையை மாற்றாமல் நிலையானதாக இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.


Pengarang :