Pegawai Dasar Exco Usahawan, Mohd Suffian Ahmad Saifuddin bersama Pengarah Jabatan Pelesenan MPS, Hairudin Daud membuat tinjauan di Pasar Awam Selayang, Selayang pada 19 Jun 2020. Foto HAFIZ OTHMAN
SELANGOR

சிலாங்கூரில் சிறு வணிகர்களுக்கு உதவ புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் !!!

ஷா ஆலம், ஜூன் 19:

வணிகத்தை உயர்த்துவதற்காக மாநிலத்தில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும்அங்காடி வியாபாரிகளுக்கு நிதி மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவை வழங்கப்படும் என்று தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினரின் கொள்கை ஆலோசகர் மொஹமட் சஃபியன் அமாட் சைபுதீன் கூறினார்.

” இந்த அம்சங்களில் பற்றாக்குறை இருந்தால் அவர்களுக்கு (சிறு வணிகர்கள் மற்றும் வணிகர்கள்) உதவுவது எங்கள் நோக்கம், மேலும் சில பொருத்தமான திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. நாம் இவர்களுக்கு ஆதரவை வழங்க வேண்டும், குறிப்பாக கோவிட் -19 கட்டுப்பாட்டு உத்தரவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் இன்று செலாயாங்  நகராாண்மைக்  கழகத்துடன் (எம்பிஎஸ்) காலை சந்தையை பார்வையிட்ப பின்னர் கூறினார்.

பார்வையிட்ட சில தளங்களில் எம்பிஎஸ் அரங்கத்தில் வளாகம், செலயாங் பாரு காலை சந்தை, தாமான் ஸ்ரீ கோம்பக்  நள்ளிரவு பஜார், கிரீன்வுட் பார்க் வாகன நிறுத்துமிடம் மற்றும் ஸ்ரீ கோம்பக் நவீன சந்தை ஆகியவை அடங்கும். வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே சீரான செயலாக்க நடைமுறைகளுடன் (SOP) பின்பற்றுவதை எம்பிஎஸ் உறுதி செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :