NATIONAL

போர்ட் கிள்ளானில் சுங்கத்துறை ரிம 2.6 மில்லியன் மதிப்புள்ள மதுபானங்களை கைப்பற்றியது

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19:

வடக்கு துறைமுகம், போர்ட் கிள்ளானில் ஜூன் 12-இல் கடத்தல் பேர்வழிகள் ரிம 5.6 மில்லியன் மதிப்புள்ள ( வரியுடன் ) 9 மதுபானக் கொள்களன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மத்திய மண்டல சுங்கத் துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் டத்தோ சுல்கர்னைன் முகமது யூசுப் கூறுகையில், அனைத்து கொள்கலன்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பல்வேறு வகையான மதுபானங்கள் சுங்கத்துறையினால் அங்கீகரிக்கப்படாதவை என்று நம்பப்படுகிறது.

165,000 லிட்டர் மதுபானங்களை பறிமுதல் செய்ததில் ரிம 2.6 மில்லியன் என மதிப்பிடப்பட்ட அனைத்து மதுபானங்களையும் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றார். “இந்த புதிய வழியில் கடத்தல் நோக்கங்களுக்காக கப்பல் முகவர்களின் உதவியை நாடும் வெளிநாட்டினரை உள்ளடக்கியதாக நம்பப்படும் சிண்டிகேட் ஒரு புதிய செயல்பாட்டு முறையை கண்டுபிடிப்பதற்கும் வழிவகுத்தது,” என்று அவர் இன்று இங்குள்ள கெளானா ஜெயாவில் உள்ள மத்திய மண்டல சுங்கத் துறையில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


Pengarang :