NATIONAL

ரோன் 97 மற்றும் ரோன் 95 பெட்ரோலின் சில்லரை விலை பத்து சென் ஏற்றம் கண்டுள்ளது !!!

புத்ராஜெயா, ஜூன் 26:

நாளை சனிக்கிழமை, ஜூன் 27-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3-ஆம் தேதி வரையில், ரோன் 97 மற்றும் ரோன் 95 ரகப் பெட்ரோல், லிட்டருக்கு தலா 10 சென் ஏற்றம் கண்டிருக்கின்றன. இதன்வழி, ரோன் 97 ரகப் பெட்ரோல், ஒரு லிட்டர் ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு விற்கப்படும்.

ரோன் 95 ரக பெட்ரோல், ஒரு லிட்டர், ஒரு ரிங்கிட் 69 சென்னுக்கு விற்கப்படும்.
டீசல், லிட்டருக்கு, 9 சென் ஏற்றம் கண்டு, லிட்டருக்கு ஒரு ரிங்கிட், 86 சென்னுக்கு விற்கப்படும்.

– பெர்னாமா


Pengarang :