Timbalan Ketua Polis Selangor, Dato’ Arjunaidi Mohamed (kiri) bersama anggotanya membuat rondaan di sekitar Pulau Ketam pada 30 Jun 2020.
NATIONAL

பிகேபிபியை மீறிய குற்றத்திற்காக 251 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது !!!

புத்ராஜெயா, ஜூலை 6:

மீட்புநிலை நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபிபி)  மீறிய குற்றத்திற்காக, நேற்று ஞாயிற்றுக்கிழமை அரச மலேசிய போலீஸ் படை 251 பேரை கைது செய்தது. இவர்களில்,140 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய 111 பேர் தடுப்பு காவலில் வைக்கப் பட்டிருப்பதாக, மூத்த அமைச்சருமான டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.

பிகேபிபி உத்தரவுகளை மீறியதற்காக பி.டி.ஆர்.எம் 251 நபர்களை கைது செய்தனர். அவர்களில் 140 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய 111 பேர் தடுப்பு காவலில் வைக்கப் பட்டிருக்கின்றனர். மனமகிழ் மையம் அல்லது இரவு கேளிக்கை மைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 125 பேரும், தொடுகை இடைவெளியை பின்பற்ற தவறிய 123 பேரும், செயல்பாட்டு தர விதிமுறையைப் பின்பற்றாமல் இருந்த குற்றத்திற்காக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அதோடு, நேற்று 3,972 வழிபாட்டுத் தலங்களிலும், ஆயிரத்து 432 பூங்காக்கிலும் போலீசார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்

–பெர்னாமா


Pengarang :