Ng Sze Han meluangkan masa meninjau keadaan laluan pejalan kaki berbumbung baharu yang menghubungkan Pusat Kewangan dan Korporat Puchong (PFCC) ke LRT Taman Perindustrian Puchong di Bandar Puteri Puchong pada 11 Julai 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
SELANGOR

காலை மற்றும் இரவுச் சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசாங்கம் மனநிறைவு !!!

பூச்சோங், ஜூலை 11:

காலை மற்றும் இரவுச் சந்தைகளில் கோவிட்-19 தொற்று நோய் பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பொது மக்கள் மற்றும் வணிகர்கள் பின்பற்றி வருவதை எண்ணி சிலாங்கூர் மாநில அரசாங்கம் மனநிறைவு கொள்வதாக ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார். அனைவரும் புதிய நடைைமுறைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர் என்றும் இது தொற்று நோய் சங்கிலியை அறுக்க எடுக்கும் முயற்சியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

” நாம் மனநிறைவுக் கொள்கிறேன். சில வணிகர்கள் என்னிடம் நேரிடையாக வந்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். மூன்று மாதங்களாக வணிக நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை,” என எல்ஆர்டி பண்டார் புத்ரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது இவ்வாறு எங் ஸீ ஹான் கூறினார்.


Pengarang :