Dato’ Seri Amirudin Shari berbahas di Dewan Negeri Selangor, Shah Alam pada 16 Julai 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

வெளிப்படையான போக்குடன் சிலாங்கூர் அரசு மத்திய அரசின் உதவிகளுக்கான செலவினத்தை அனுப்ப தயார் – மந்திரி பெசார்!!

ஷா ஆலம், ஜூலை 17 :

மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைக்கான செலவினங்களின் தரவுகளை வெளிப்படையான கொள்கையின் அடிப்படையில் மலேசிய கருவூலத்திற்கு அனுப்ப சிலாங்கூர் மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக மந்திரி பெசார் தெரிவித்தார். முன்னதாக பிரதமர் டான்ஸ்ரீ முகிடின் யாசின் அறிவித்த மத்திய அரசின் வெ.10 மில்லியன் மிகவும் விவேகத்துடன் செலவிடப்படும் என்றும் கூறிய மந்திரி பெசார் அமிரூடின் ஷஹாரி அதற்கான செலவின தரவை வழங்கவும் தயாராக இருப்பதாக கூறினார்.

கோவிட் -19 பெருந்தொற்றை சமாளிக்க வேண்டி முன்னதாக மத்திய அரசு ஒதுக்கிய வெ.130 மில்லியன் நிதியத்தில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசிற்கு வெ.10 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
ஒதுக்கப்பட்டுள்ள நிதியத்தின் பெரும் பகுதி “முன்னணி ஊழியர்களுக்கு” பயன்படுத்தப்படும் எனவும் சிலாங்கூர் மாநில சட்டமன்ற்அ அமர்வின் போது சிலாங்கூர் பொருளாதார மிட்பு திட்டத்தின் இறுதி அமர்வில் அவர் இது குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும்,சிலாங்கூர் அரசாங்கம் “முன்னணி ஊழியர்”களுக்கு உதவுவதற்கும் அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் அதில் காவல்துறை மற்றும் இராணுவத்திற்கு குளிரூட்டி வசதிகளும் அடங்கும் என்றார். கடந்த மார்ச் 23ஆம் தேதி பிரதமர் முகிடின் கோவிட்-19 தொற்றை சமாளிக்க மாநில அரசிற்கு வெ.130 மில்லியன் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :