266 kertas siasatan berhubung berita palsu Covid-19 dibuka sehingga semalam.
NATIONAL

போலிச் செய்தி தொடர்பில் 266 விசாரணை அறிக்கைகளை காவல்துறை திறந்துள்ளது !!!

புத்ராஜெயா, ஜூலை 19:
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம்.-மும், தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு எஸ்.கே.எம்.எம்.-மும், கொவிட்-19 நோய்த் தொடர்பான போலிச் செய்திகள் குறித்து, புதிதாக விசாரணை அறிக்கை ஏதும் திறக்கவில்லை. போலிச் செய்திகள் அதிகரிப்பது குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை இது காட்டுவதாக, தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

எனினும், நடப்பில் இருக்கும் சட்டத்தின் அடிப்படையில், போலிச் செய்திகள் தொடர்பாக கிடைத்த சில அறிக்கைகளை மதிப்பிடும் பணியை, பி.டி.ஆர்.எம்.-மும், எஸ்.கே.எம்.எம்.-மும், மேற்கொண்டு வருவதாக அவர் இன்று, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். கடந்த ஜூலை 18-ஆம் தேதி வரை, கொவிட்-19 நோய்க் குறித்த போலிச் செய்திகள் தொடர்பாக பி.டி.ஆர்.எம்.-மும், எஸ்.கே.எம்.எம்.-மும், 266 விசாரணை அறிக்கைகளைத் திறந்திருந்தன.

அதில், 172 அறிக்கை இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், 30 பேர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டிருப்பதாகவும், 12 பேருக்கு எச்சரிக்கை அறிக்கை வழங்கப்பட்டிருப்பதாகவும், 13 பேர் நீதிமன்ற விசாரணையில் இருப்பதாகவும் எஞ்சிய 17 பேர் குற்றங்களை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
போலிச் செய்திகள் பரவுவது குறித்து, பி.டி.ஆர்.எம்.-மும், எஸ்.கே.எம்.எம்.-மும், தொடர்ந்து கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்மாயில் குறிப்பிட்டார்.

— பெர்னாமா


Pengarang :