NATIONAL

இளம் வேளாண் தொழில்முனைவோர் திட்டத்தில் அதிகமானோர் ஈடுபட ஃபாமா ஊக்குவிக்கும்

 

ஷா ஆலம், இளம் வேளாண் தொழில் முனைவோர் கடனுதவித் திட்டத்தில்

அதிகமானோர் பங்கேற்பதைச் சிலாங்கூர் மாநிலக் கூட்டரசு விவசாயச் சந்தை வாரியம்

ஊக்குவிக்கிறது.

 

நாட்டிற்கு மிக முக்கியத் துறையாக விளங்கும் உணவு உற்பத்தித் துறையில் இளம்

தொழில்முனைவோரின் எண்ணிக்கையை அதிகமாக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்

படுவதாக மாநில ஃபாமா இயக்குநர் அப்துல் ரஷிட் பாஹ்ரி கூறினார்.

 

இத்திட்டத்திற்கு இளம் தொழில்முனைவோரிடமிருந்து ஊக்கமூட்டும் வகையில் ஆதரவு

கிடைத்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மாநில ஃபாமா வாரியத்தின் வாயிலாக

பெறப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றார் அவர்.

 

விவசாயத் துறையில் நீண்ட கால அடிப்படையில் பலன் பெறுவதற்கு ஏதுவாக மேலும்

அதிகமான இளம் தொழில்முனைவோர் இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நேற்று

இங்குள்ள பாசார் தானி வியாபார மையத்தில் தேசியக் கொடிகளைப் பறக்கவிடும்

இயக்கத்தைத் தொடக்கி வைத்த பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :