SELANGOR

மலேசியவின் 63 வது சுதந்திர நாள், கோவிட் 19 யை எதிர்க்க ஒற்றுமையாக செயல்பட்ட எல்லா மலேசியர்களும் உரியது என்றார் மந்திரி புசார்.

ஷா ஆலாம் , இந்த 63 வது சுதந்திர நாள், கோவிட் 19 நோய்த்தொற்றை எதிர்க்க ஒற்றுமையாக இணைந்து செயல்பட்ட எல்லா மலேசியர்களும் மரியாதை செலுத்த உரித்தான நாள் என்றார் சிலாங்கூர் மாநில மந்திரி புசார்.
நாடு இக்கட்டான நடமாட்டக் கட்டுப்பாட்டினை எதிர்கொண்ட வேளையில்  மக்களுக்குப் பல வழிகளில் சேவையாற்றிய உணவு வினியோகஸ்தர்கள் முதல் மருத்துவப் பணியாளர்கள், காவல்படையினர், சமூகச் சேவகர்கள் வரை அனைவரின் அற்பணிப்பு பெரும் மதிப்புக்குரியது.
நாட்டின் 63வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் வண்ணம் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெளியிட்டுள்ள ஒளிநாடாவில் சிலாங்கூர் மக்களுக்குத் தனது பாராட்டினை அவர் தெரிவித்துக்கொண்டார்.
அவர் மேலும் விவரிக்கையில் மலேசிய மக்கள் சவால்களைச் சமாளிப்பதில் சாதனையாளர்கள் என்பதனை நிரூபிக்க இந்தத் தொற்றுநோய் சவால் இன்னொரு சந்தர்ப்பம். மலேசியாவின் பல இனச் சமுதாயத்தின் ஒற்றுமையால், நாடு எத்தனையோ சவால்களை வெற்றிகரமாகக் கடந்து வந்துவிட்டது.
இந்தத் தொற்று நோய் சவால் இன்றைய சமுதாயத்திற்கு புதிய விதப் போராட்ட அனுபவங்களையும் வழங்கினாலும், மலேசியர்கள் எதனையும்  இணைந்து எதிர்கொள்வதில் ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்கள். அவர்களின் உழைப்பாலும், ஒற்றுமையாலும் வெற்றியை அடைந்தே தீருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.

Pengarang :