NATIONAL

கல்வித் திட்டத்தில் ருக்குன் நெகாரா கோட்பாடுகள் அலங்காரத்திற்காக அல்ல; அவசியத்திற்காக ஒற்றுமைத் துறை அமைச்சர்  தகவல்

கோலாலம்பூர், செப் 1-  தேசிய கல்வித் திட்டத்தில் ருக்குன் நெகாரா கோட்பாடுகளை சேர்ப்பது அவசியத்தின் அடிப்படையிலே தவிர அலங்காரத்திற்காக அல்ல என்று தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சதிக் கூறினார்.

பல்லின மக்களை பிரதிபலிக்கும் இந்நாட்டில் ஒற்றுமையுடன் அணுக்கமான தொடர்பைக் கொண்ட ஒன்றாக ருக்குன் நெகாரா கோட்பாடு விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

ருக்குன் நெகாரா கோட்பாடுகளை மக்கள் புரிந்து கொண்டு அதனை போற்றுவது ஒற்றுமையின் வெற்றிக்கான சூட்சுமம் என்று ஒற்றுமை துறை அமைச்சு கருதுகிறது. ருக்குன் நெகாரா கல்வித் திட்டம் ஒற்றுமையுடன் தொடர்பை கொண்டுள்ளது. அதேசமயம் ஒற்றுமை பல்வகைகளின் பிரதிபலிப்பாக உள்ளது என்றார் அவர்.

இன ஒற்றுமையை மேலோங்கச் செய்ய வேண்டுமெனில் ஒற்றுமையின் கூறுகள் மக்கள் மனதில் ஆழமாக விதைக்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்காக நமது போராளிகள் செய்த தியாகங்கள் வீணடிக்கப்படக் கூடாது     என அவர் மேலும் சொன்னார்.

பெர்னாமா தொலைக்காட்சியில் இடம்பெற்ற ருக்குன் நெகாரா ஒரு ஒன்றிணைந்த தேசம் எனும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் கூறினர்.

 


Pengarang :