NATIONAL

கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் 28 பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்

புத்ரா ஜெயா, செப் 10- கெடாவிலுள்ள கோத்தா ஸ்டார் மாவட்டத்தின் 28 பகுதிகளில் இன்று நள்ளிரவு 12.01 மணி தொடங்கி இம்மாதம் 25ஆம் தேதி வரை நிர்வாக அடிப்படையிலான கடுமையாகப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படவுள்ளது.

இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 366,787 பேரை உள்ளடக்கியதாக இருக்கும் என்று மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினர்.

இம்மாவட்டத்திலுள்ள சுங்கை மற்றும் தாவார் தொற்று மையங்களில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மீட்சி நிலைக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் ஆகக் கடைசி நிலவரம் குறித்து விளக்குவதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆணையின்படி இப்பகுதிக்குள் யாரும் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்கமாட்டார்கள் எனக் கூறிய அவர், போலீசாரும் இராணுவத்தினரும் சாலைத் தடுப்புகளை அமைத்து காவல் பணியில் ஈடுபடுவர் என்றார்.


Pengarang :