NATIONALSELANGOR

2021 வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை

ஷா ஆலம், செப் 15- வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டவிருக்கும் சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்படுத்திய விளைவுகளையும் அதனால் மாநிலத்தின் வருமானம் குறைந்துள்ளதையும் நாம் உணர்ந்துள்ளோம். ஆகவே,  வரும் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

கடந்தாண்டில் வரவு செலவு திட்டத்திற்காக சிலாங்கூர் அரசு 233 கோடி வெள்ளியை அங்கீகாரித்தது. அதில் 113 கோடி வெள்ளி அதாவது 48.56 விழுக்காட்டுத் தொகை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் 120 வெள்ளி அதாவது 51.44 விழுக்காடு நிர்வாக செலவுகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்கும் விதமாக 12  கோடியே 77 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள ஏழு திட்டங்களை மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

 


Pengarang :