SELANGOR

விவசாயத் துறையில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரிப்பு

ஷா ஆலம், செப் 15 – நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இளைஞர்கள் தற்போது ஆர்வம் காட்டி வருவதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஐகோன் அக்ரோ சிலாங்கூர் 2020 திட்டத்தில் பங்கேற்பவர்களில் நாற்பது வயதுக்கும் குறைவானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இந்த மாற்றத்தை உணர்த்துவதாக உள்ளது என்று அவர் சொன்னார்.

விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக வருமானத்தை ஈட்டுவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் வழி தரமான விவசாய பொருள்களை உற்பத்தி செய்வது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் அவர்.

பெரும்பாலான உற்பத்தி பொருள்கள் உள்நாட்டில் மட்டுமின்றி சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற கண்காட்சியிலும் இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழக கட்டிடத்தில் நடைபெற்ற ஐகோன் அக்ரோ சிலாங்கூர் 2020 நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.

மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், மார்டி எனப்படும் விவசாய மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி கழகம் போன்ற அமைப்புகள் விவசாயத் துறையில் புதிய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் சிலாங்கூர் அத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது என்றும் மந்திரி புசார் குறிப்பிட்டார்.


Pengarang :