SELANGOR

மறுசுழற்சி மையங்களின் உருவாக்கத்திற்கு 2021 பட்ஜெட்டில் முன்னுரிமை

காஜாங், செப் 22- பாரம்பரிய கிராமங்கள் மற்றும் அடுக்ககங்களில் மறுசுழற்சி மையங்களை அமைக்கும் திட்டத்திற்கு  சுற்றுச்சூழல் துறை  வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கவிருக்கிறது..

இந்நோக்கத்திற்காக கூடுதல் ஒதுக்கீட்டை வரும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் தாங்கள் எதிர்பார்ப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஸீ லோய் சியான் கூறினார்.

அனைத்து இடங்களிலும் குறிப்பாக பாரம்பரிய கிராமங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மறு சுழற்சி மையங்களை அமைக்க விரும்புகிறோம். இதன் வழி  மக்கள் குப்பைகளை பொருள்வாரியாக பிரித்து தொட்டிகளில் போடுவதற்கு வசதியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓசோன் மண்டலத்தைப் பாதுகாக்கும் இயக்கத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூரில் 12 ஊராட்சி மன்றங்களின் கீழ் 371 பாரம்பரிய கிராமங்கள் உள்ளன.

 


Pengarang :