SELANGOR

இரு தினங்களே எஞ்சியுள்ளன சிலாங்கூர் அரசின் தொழில்திறன் பயிற்சிக்கு விரைந்து விண்ணப்பம் செய்வீர்

ஷா ஆலம், செப் 28- இக்திசாஸ் எனப்படும் தொழில்திறன் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க விரைந்து விண்ணப்பம் செய்யும்படி சிலாங்கூரிலுள்ள இளைஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த தொழில்திறன் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யும்படி எஸ்.டி.டி.சி எனப்படும் சிலாங்கூர் தொழில்திறன் மேம்பாட்டு மையத்தின் நிதி மற்றும் கணக்கியல் நிர்வாக அதிகாரி ரோனிஃபித்ரா பசிரோன் கேட்டுக் கொண்டார்.

புதிய மாணவர்களை சேர்ப்பது மற்றும் மாணவர்களை அடுத்த நிலைக்கு உயர்த்துவது ஆகிய இரு அம்சங்கள் மேற்கொள்ளப்படுவதால் குறைந்த மாணவர்களுக்கு மட்டுமே இதில் வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

இக்திசாஸ் நிதி நம்வசம் உள்ள காரணத்தால் தகுதி உள்ள மாணவர்களுக்கு தொழில் கல்வி பெறுவதற்கான வாய்ப்பினை வழங்க விரும்புகிறோம். இதன் மூலம் அவர்கள் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். குறைவான இடங்களே உள்ளதால் மாணவர்கள் விரைந்து விண்ணப்பம் செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

இந்த தொழில்திறன் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

  1. விண்ணப்பதாரரின் பெற்றோர் மலேசியர்களாக இருக்க வேண்டும்.
  2. விண்ணப்பதாரர் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவராகவும் கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தவராகவும் இருக்க வேண்டும்.

– சிலாங்கூரில் பிறந்து  வசித்து வருபவராக இருக்க வேண்டும்.

– விண்ணப்பதாரர், அவரின் தாய் அல்லது தந்தை சிலாங்கூரில் வசிப்பவராக          இருக்க வேண்டும்.

– விண்ணப்பதாரர் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசித்து வருபவராக இருக்க வேண்டும்.

– விண்ணப்பதாரர் எஸ்.பி.எம். சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும்.

வாகன பழுதுபார்ப்பு, சாயம் பூசுதல், மோட்டார் பழுதுபார்ப்பு, குளிசாதனம் மற்றும் மின்னியல் பொருள் பழுதுபார்ப்பு போன்ற பயிற்சிகள் இங்கு வழங்கப்படுவதாக ரோனிஃபித்ரா  கூறினார்.

இது தவிர, கணினி பயிற்சி, சிகையலங்காரம், சமையல், கேக் வகைகள் தயாரிப்பு, தையல் ஆகிய பயிற்சிகளையும் இங்கு பெற முடியும் என்றார் அவர்.

இப்பயிற்சிகளில் பங்கு பெற விரும்புவோர் http://www.selangor.gov.my அல்லது http://www.inpens.edu.my. அகப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.

மேல் விபரங்களுக்கு 019-3434111 (சுசைலி) அல்லது 03-32812619 (அகமது) ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

 

 

 

 


Pengarang :