NATIONALSELANGOR

சபாவிலிருந்து திரும்பிய மந்திரி புசாருக்கு கோவிட்-19 சோதனை

ஷா ஆலம், செப் 28- சபாவிலிருந்து இன்று மதியம் திரும்பிய சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமானம் நிலையம் 2இல் (கே.எல்.ஐ.ஏ.2) கோவிட்-19 நோய்த் தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார அமைச்சின் விதிமுறைக்கேற்ப தனிமைப்படுத்திக் கொள்வதற்கு அடையாளமாக மணிக்கட்டில்  இளஞ்சிவப்பு நிற வளையத்துடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை மந்திரி புசார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சுகாதார அமைச்சின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கேற்ப நான் மணிக்கட்டில் இளஞ்சிவப்பு வளையம் அணிந்துள்ளேன். விமான நிலையத்தில் மருத்துவ சோதனைகளை மேற்கொண்டு வரும் அனைத்துப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்று அந்த டிவிட்டர் பக்கத்தில் மந்திரி புசார் குறிப்பிட்டுள்ளார்.

சபா மாநில தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு உதவுவதற்காக மந்திரி புசார் கடந்த 22ஆம் தேதி முதல் அங்கு தங்கியிருந்தார்.

கடந்த 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை சபாவிலிருந்து தீபகற்ப மலேசியா திரும்புவோர்  கட்டாய கோவிட்-19 சோதனைக்கு உட்பட வேண்டும் என்பதோடு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். என்ற நிபந்தனையையும் கடைபிடிக்க வேண்டும்.

ஆய்வுக்கூட சோதனைகளின் முடிவுகள் தெரியும் வரை சம்பந்தப்பட்டவர்கள் அந்த இளஞ்சிவப்பு வளையத்தை அணிந்திருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறியிருந்தார்.

 

 


Pengarang :