NATIONAL

சி ஐ எம் பி கடனைத் திருப்பிச் செலுத்தத் தவணைக் காலத்தை நீடிக்க விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர் செப் 28- சி ஐ எம் பி வங்கி தனது கடன் வாடிக்கையாளர்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அரசாங்கம் வழங்கிய ஆறு மாதத் தவணைக் காலம்  எதிர்வரும் புதன்கிழமை காலாவதியாவதனால் அக்காலக் கெடுவை மேலும் நீடிக்க  விரும்பினால் உடனடியாக அந்த வங்கியைத் தொடர்புகொள்ளக் கேட்டுக்கொள்கிறது.

கடன் பெற்றவர்கள் கடனைத் திரும்பச் செலுத்தும் தவணைகளை நீடிப்பதற்கும், தொகைகளை மறுசீரமைப்பு செய்ய விண்ணப்பிப்பதால் வங்கிகள் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் கடனைத் திரும்பச் செலுத்தும் நாணயத் தன்மை கண்காணிப்பு முறையினால் வாடிக்கையாளருக்கு  எந்தப் பாதகமும் ஏற்படாது.

அதன் 40,000 வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அவ்வங்கி (700 கோடி) 7 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாகவும், இந்தச் சிறப்பு சலுகை ஏறக்குறைய 100 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்குக் கிட்டும் என்று அவ்வங்கி தெரிவித்தது.

சி ஐ எம் பி வங்கி சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உதவும் வண்ணம் 2.5 பில்லியன் ரிங்கிட்டை அங்கீகரித்துள்ளதாகவும், சிறு  மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உதவ அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளுக்கு முழு அளவு ஒத்துழைப்பை அவ்வங்கி வழங்கி வருவதாகவும் அது கூறியது.

வீடு, சொத்துவுடமை கடன் பெற்று அந்தக் கடன் மறு சீரமைப்பு செய்யாதவர்கள் தங்கள் வசிக்கும்  இடத்திற்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு சி ஐ எம் பி வங்கிக்குச் சென்று அந்தக் கடன் மறு சீரமைப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்.

சிறு நடுத்தரத் தொழில் கடன் பெற்றுள்ளவர்கள் https://www.cimb.com.my/frap என்ற அகப்பக்கத்தின் வழியும் உதவிபற்றிய மேல் விவரங்களைப் பெறலாம் என்றது அவ்வங்கி.

இதே திட்டம் பற்றி  சிறு நடுத்தரத் தொழில் வங்கி எனப்படும் (எஸ்எம்பி) வங்கியும், கடந்த  ஆகஸ்ட் 2020 தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அதன் எல்லாச் சிறு நடுத்தரத் தொழில் வாடிக்கையாளர்களுக்கும் கடன் திரும்பச் செலுத்தும் காலக்கெடு போன்ற உதவி திட்டங்களின் வழி உதவவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

 


Pengarang :