SELANGOR

மேம்பாட்டுத் திட்ட அமலாக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைக் கேட்கும் முதல் மாநிலம் சிலாங்கூர்

ஷா ஆலம், அக் 4- மேம்பாட்டு காரணங்களுக்காக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான அந்தஸ்தை மீட்டுக் கொள்ளும் முன்னர் அது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டறியும் முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது.

பொதுமக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் குறிப்பாக சுற்றுச்சூழலை பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்களை அமல் செய்வதில் மாநில அரசு கடைபிடித்து வரும் வெளிப்படையான மற்றும் நேர்மையான அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது என்று சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹி லோய் சியான் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற 77வது தேசிய நில மன்றக் கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான அந்தஸ்தை மீட்டுக் கொள்வது மற்றும் அதற்கு மாற்றாக நிலம் தருவது தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்குவதற்கு ஏதுவாக 1984ஆம் ஆண்டு தேசிய வனச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிகிறேன்.

வனப்பகுதி மேம்பாடு தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வை நடத்தியதன் வழி மாநில அரசு ஒரு படி முன்னோக்கி சென்று விட்டது என்றார் அவர்.

வட கோல லங்காட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை மேம்பாட்டுக் காரணங்களுக்காக எடுத்துக் கொள்வது தொடர்பில் மாநில அரசு கடந்த 28ஆம் தேதி கேரித் தீவில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வை நடத்தியது.

 

 


Pengarang :