(示意图)
NATIONALPENDIDIKANSELANGOR

கிள்ளான் மாவட்டத்தில் பொது முடக்கம் 14 தமிழ்ப் பள்ளிகள் பாதிப்பு

கிள்ளான், அக் 8- கோவிட்-19 பரவலைத்  தடுக்கும் வகையில் கிள்ளானில் உள்ள 
பள்ளிகளை  மூடுவதற்கு கல்வியமைச்சு எடுத்துள்ள  நடவடிக்கையில் இம்மாவட்டத்திலுள்ள 14 தமிழ்ப் பள்ளிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று தொடங்கி இம்மாதம் 23 ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ள 142 
பள்ளிகளில் இந்த 14 தமிழ்ப் பள்ளிகளும் அடங்கும். கிள்ளான் சிவப்பு மண்டலமாக 
அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்பள்ளிகள் மூடப்பட்டன.

பிராப்டன் தோட்டத் தமிழ்ப் பள்ளி, ஜாலான் ஆக்கோப் தோட்டத் தமிழ்ப் பள்ளி, 
மெதடிஸ்ட் தமிழ்ப் பள்ளி, பத்து அம்பாட் தோட்டத் தமிழ்ப் பள்ளி, புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப் பள்ளி, எமரால்டு தோட்டத் தமிழ்ப் பள்ளி, ஹைலண்ட்ஸ் தோட்டத் 
தமிழ்ப் பள்ளி, ஜாலான் தெப்பி சுங்கை தமிழ்ப் பள்ளி, ஜாலான் மேரு தமிழ்ப் பள்ளி, சிப்பாங் லீமா தமிழ்ப் பள்ளி, வலம்புரோசா தோட்டத் தமிழ்ப் பள்ளி, தாமான் செந்தோசா தமிழ்ப் பள்ளி, நோர்த்ஹம்மக் தமிழ்ப் பள்ளி பெர்சியாரான் ராஜா மூடா மூசா தமிழ்ப் பள்ளி ஆகியவையே அந்த  14 தமிழ்ப் பள்ளிகளாகும்.

கல்வியமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் மூடப்பட்ட பள்ளிகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. 

மூடப்பட்ட ஆரம்ப, இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள் தொடர்பான  விபரங்களை www.moe.gov.my என்ற கல்வியமைச்சின் அதிகாரபூர்வ  அகப்பக்கம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

Pengarang :