警员2020年3月20日在巴生市议会总部大厦前的路段设路障,检查来往的车辆以确保民众遵守行动管制令。
ECONOMYNATIONALPBTSELANGOR

கிள்ளானில் மட்டுமே நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு பாதிப்பில்லை

கோலாலம்பூர், அக் 8- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கிள்ளானில் மட்டுமே அமல்படுத்தப்படும். அந்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் இந்த ஆணை உட்படுத்தாது.

இன்று காலை சுகாதார அமைச்சு மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் அரசு மற்றும் மாநில பாதுகாப்பு மன்றத்துடன் மத்திய அரசு அடிக்கடி தொடர்பு கொண்டு வரும். ஆகக் கடைசி நிலவரங்கள்  குறித்து அவ்வப்போது அறிவிக்கப்படும் என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கோலக்கிள்ளான் துறைமுகம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்,


Pengarang :