SELANGOR

சிலாங்கூரில் இந்திய கிராமத் தலைவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்வு

ஷா ஆலம் அக் 14- சிலாங்கூர் மாநில இந்திய கிராமத் தலைவர்களின் எண்ணிக்கை         48 பேரிலிருந்து 62ஆக அதிகரிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பேச்சுவார்த்தையின்  வழி இந்திய கிராமத் தலைவர்களின் எண்ணிக்கை 62ஆக அதிகரிப்பதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அறிவித்தார். சிலாங்கூர் மாநில இந்தியர்களின்  வாழ்வாதாரம் உயர்ந்த நிலையை அடையவும் மாநில அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையவும் இந்திய கிராமத் தலைவர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் 48 இந்திய கிராமத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனம் வரும் நவம்பர் மாத இறுதியில் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து கணபதிராவ் முயற்சியில் அடுத்தாண்டு ஜனவரியில் இந்திய கிராமத் தலைவர்களாக 62 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த நியமனத்தின் வழி சிலாங்கூர் மாநிலத்தில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு நிறைவான சேவையை வழங்க முடியும் என்று  ராஜேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே, கோவிட்-19 காலக்கட்டத்தில் சுமார் 5,000 வசதி குறைந்த குடும்பங்களுக்கு இந்திய கிராமத் தலைவர்கள் உதவிப் பொருள்கள் வழங்கியிருப்பதும் இளைஞர்கள் சுய தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கையில் திறன் பயிற்சிகளை வழி நடத்தியதும் பாராட்டுக்குரியது என்று என கணபதிராவ் குறிப்பிட்டார்.

இதையடுத்து இந்திய கிராமத் தலைவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெரும் முயற்சியை மேற்கொண்ட ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவுக்கு ராஜேந்திரன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :