NATIONALSELANGOR

சிலாங்கூரில் நீர் விநியோகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் வழக்க நிலைக்கு திரும்புகிறது.

ஷா ஆலம், செப் 4:- இன்று புதன் கிழமை காலை 6.00 மணிக்கு வழங்கப்பட்ட தகவலின் படி சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட கிள்ளான், பெட்டாலிங், கோலசிலாங்கூர், உலு சிலாங்கூர் கோல லங்காட் மாவட்டங்கள் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களிலுள்ள 1292 குடியிருப்புகளை சார்ந்த சுமார் 12 லட்சம் பயனீட்டாளர்களில் 83 விழுக்காடு அல்லது 1097 இடங்களுக்கு குழாய் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பி உள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இயற்கையாக ஆறுகளில் கலக்கும் திடக்கழிவு மற்றும் திரவ கழிவுகளை சுத்திகரிக்கும் முறைகளையே நமது நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கொண்டுள்ளன. வழக்கமாக நீர் சுத்திகரிப்பு விவகாரத்தில் எதிர் நோக்கும் இம்மாதிரியான கழிவுகளிலிருந்து சற்று மாறுபட்டதாக உள்ளது, இப்பொழுது நாம் ஏதிர் நோக்கும் சவால்கள் என்றார் அவர்.

நீர் சுத்தமாக இருந்தாலும், சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரில் வீசும் வாடை மிக கடமையானதாக இருப்பதால், நீர் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டியுள்ளது, இந்த வாடைக்கான முக்கிய காரணம் என்ன? நீரில் அந்த மாதிரி வாடை வீசும் பொழுது அது எங்கே, எப்படிப்பட்ட ரசாயனங்களால் ஏற்படுகிறது, என்ன மாதிரியான விளைவுகளை பயனீட்டாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதனை ஆராய வேண்டியுள்ளது.

நீரை மாசு படுத்துவது குற்றம்! பொது மக்களுக்கு விநியோகிக்கப் படவேண்டிய நீர் எப்படி மாசுபடுகிறது. அல்லது மாசு ஏற்படுத்தப்படுகிறது என்பதனை ஆராயும், கண்டறியும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமின்றி மற்ற அரசாங்க ஏஜென்சிகளுக்கும் உண்டு என்றாலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் எவரையும் குற்றஞ்சாட்டிக் கொண்டு இருக்க முடியாது.

அது மக்களுக்கான நற்செயலாக இருக்காது ! .நீர் மாசுபடும் ஒவ்வொரு முறையும், அதனை உடனடியாக எப்படி சீர்செய்வது? எப்பொழுது மக்களுக்கான சுத்தமான நீரை வழங்குவது, என்பதே மாநில அரசின் உடனடி பணியாகவும் கேள்வியாகவும் இருப்பதாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்


Pengarang :